Firefox
Firefox
உருவாக்கப்பட்டது:
81% of users voted this helpful
விண்டோசில் ஃபயர்பாக்ஸை எப்படி நிறுவுவது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
- முந்தைய ஃபயர்பாக்ஸ் பதிப்பிலிருந்து மேம்படுத்துகிறீர்கள் என்றால், சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை புதுப்பிக்கவும்-கட்டுரையைப் பார்க்கவும்.
விண்டோசிற்கு மட்டும் இந்தக் கட்டுரை பொருந்தும்.
ஃபயர்பாக்ஸை நிறுவுவதற்கு முன்னதாக:
- உங்களது கணினி இத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதி செய்யவும்: System Requirements.
- வரம்புள்ள விண்டோஸ் XP கணக்கைக் கொண்டு ஃபயர்பாக்ஸை நிறுவ வேண்டாம். மேலும் விவரங்களுக்கு, பார்க்க Types of user accounts at microsoft.com.
- ஏதாவதொரு உலாவியில் (எ.கா. மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்), Firefox download page-யைப் பார்க்கவும். இந்தப் பக்கமானது உங்களுக்குப் பொருத்தமான ஃபயர்பாக்ஸ் பதிப்பினைத் தானாகவே பரிந்துரை செய்யும்.
- ஃபயர்பாக்ஸ் நிறுவியைப் பதிவிறக்க, பச்சை நிற பதிவிறக்க இணைப்பைச் சொடுக்கவும். உங்கள் இணைய வேகத்தைப் பொறுத்து, பதிவிறக்கம் சில மணித்துளிகளுக்கு நீடிக்கலாம். பொறுமைக்கு நன்றி...இக்காத்திருத்தல் மதிப்பானது!
-
-யைச் சொடுக்கி, செயல்பாட்டினைத் துவக்கவும். - இதன் பிறகு, செயல் படிகளைப் பின்பற்றவும் (நிறுவும் படிநிலைகளை முடிந்தவரை சிரமமற்றதாக அமைத்துள்ளோம்).வாழ்த்துக்கள், ஃபயர்பாக்ஸை நிறுவிவிட்டீர்கள்!
- ஃபயர்பாக்ஸ் சின்னத்தை இரட்டை-சொடுக்கம் செய்வதன் மூலம் இனி எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஆன்லைனில் வரலாம்.
ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா?
உங்களுக்கு உதவ இக்கட்டுரைகள் இருக்கின்றன:
- பயர்பாக்ஸ் தொடங்கவில்லலை - தீர்வுகளை கண்டறிய
- "Firefox is already running but is not responding" error - How to fix